இன்று [09.04.2018] செவ்வாய் கிழமை கௌரவ மாநகர முதல்வரினால் கள விஜயம் ஒன்று மேற் கொள்ளப்பட்டது. இதன் போது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, ஆயுர்வேத வைத்தியசாலை, பொது நூலகம் எனப் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்குள்ள தேவைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன. கௌரவ மாநகர சபை உறுப்பினர் எஸ். எம். சபீஸ், மாநகர ஆணையாளர், உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் இவ் விஜயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் திண்மக்கழிவுகளை முறைமைப்படுத்துவது தொடர்பாகவும், பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பாகவும் இவ்விஜயத்தில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.