இர்சாத் ஜமால்
இலங்கை அரசியல் களத்தை பல எதிரும் புதிருமான மாற்றங்கள் கடந்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. சில நிகழ்வுகள் அடுத்தவர்களை ஆட்டம் காணச் செய்வதுடன் அச்சம் கொள்ளவும் செய்கின்றது. சாதகமான ஆடுகளத்தில் இலாபகரமாக வீசப்படும் பந்துகளைக்கூட மட்டையால் தடுத்து கூழ் முட்டையாக்கும் வீரர்கள் பலர் ஆட்டமிழந்து அரசியல் களத்தை விட்டும் விரட்டியடிக்கப்படும் நிலைமையையும் உருவாக்குகின்றது எனலாம்.
சமூகத்தின் அரணாக இருந்து கொண்டு, பல துணிச்சல் மிகு வினாக்களை தொடுத்து அனேக அமைச்சர்களையும் எம்பிக்ளையும் சமூகத்தின் முன்நிலையில் ஆட்டம் காணச் செய்த வசந்தம் டீ.வியின் அரசியல் நிகழ்வு அதிர்வின் தொகுப்பாளர் முஷாரப் இன்று துடுப்பெடுத்து அரசியல் களத்தில் ஆடவந்திருப்பது பலரையும் அசைத்துவிட்ட ஒரு செய்தியாகவே அமைந்திருக்னின்றது.
அம்ரூஸ் போன்ற அபாயகர வீரர்களால் வீசப்படும் பந்துகளை சிக்ஸர், பௌன்றி என எல்லைக்கோட்டை தாண்டி அடிப்பாரா? இல்லை ஆட்டமிழந்து செல்வாரா? அறிமுக வீரர் முஷாரப் என்பது பலர் எழுப்பும் கேள்வியாகும்.
ஐ.பீ.எல். டீ.P.டு போன்ற போட்டிகளில் அனைத்துலக வீரர்கள் வீசிய ஆறு பந்துகளையும் யுவராஜ் சிங் போல் வானவேடிக்கை காட்டி ஆறு ஆறு என ஓட்;;டங்களைப் பெற்றவர். இவரது அதிசய ஆட்டத்தை கண்ட உலக சாதனை வீரர்கள் ப்றைன் லாறா, சச்சின் டென்டுல்கார், சனத் ஜெய சூரிய போன்ற அரிசயல் கள ஜாம்பவான்கள் இவரை அனுகி ஆலோசனை பெற்று அரியனை ஏரியது முஷாரப் நிகழ்த்திய அதிசயம்தான். வட கொரியா, தென்கொரியா போன்று எதிரிகளாக வாழும் ஓர் இரத்த ஒற்றைப் பூர்வீக மக்களை சமூகத்தின் எழுச்சிக்காக ஒற்றுமைப் படுத்தியதே அச்சாதனையாகும். பின் நாளில் அச்சாதனை முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என அறியப்படுகின்றது.
அண்மையில் வழங்கப்பட்ட கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் பதவியானது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அல்ல அரசியல்வாதிகளின் போதை வஸ்துக்களுக்கு அடிiமாயாய் போயிருக்கும் அனைத்து இளைஞர்களையும் அதிலிருந்து மீPட்டெடுக்கும் சாத்வீகப் போராட்டத்திற்கேயாகும். என்பதை அன்று அவர் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் காணக்கூடியதாக உள்ளது.
வட மாகாணத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அ.இ.ம. காங்கிரஸானது தேசியளவில் கிளைகளை அமைத்துச் செயற்படத்தொடங்கியது. இறுதியாக நடை பெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் அக்கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகள், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மற்றும் கைப்பற்றிய சபைகளை பார்க்கையில் எல்லா இடங்களிலும் குறிப்பாக வட மற்றும் கிழக்கு மாகாணம் மற்றும் கிழக்கின் மட்டு, அம்பாறை மாவட்டங்களில் இஸ்திரத்தன்மையோடு இருப்பதை அவதானிக்க முடிகின்றது. மட்டுவில் அதன் பிரதி அமைச்சர் அமீர் அலியும், அம்பாறையில் பாராளுமன்ற உறுப்பினர் வீ.சி இஸ்மாயில் மற்றும் பொத்துவில் பிரதேசத்தில் அண்மையில் கிழக்கு இளைஞர் அமைப்பாளர் ஆகியோரால் அக்கட்சி முதன்மை இடத்தைப் பிடித்து அமைச்சர் ஹகீம் தலைமையில் உள்ள முஸ்லிம் காங்கிரஸை இன்னும் மூன்றாம் நிலைக்கு இட்டுச் செல்லும் என அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அ.இ.ம.காங்கிரஸின் அரசியல் அதிகாரம் நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம், அட்டாளைச்சேனை மற்றும் மட்டு மாவட்டங்களில் இருப்பதனால் தனது பணியினை அக்கட்சியின் கிழக்கு இளைஞர் அமைப்பாளர் முஷார்ரப் அவர்கள் தனது இயல்பியல் தனித்துவத்தில் முறையாக செய்யும் வல்லமை கொண்டவாராக இருந்த போதும் அது அவர் பிரதேசத்தில் சாத்தியமாகுமா? என்ற கேள்வி பலர் மனங்களில் எழும்புகின்றது.
மிகவும் திறமையான வீரர்கள் இருந்தும் சிம்பாவே, வெஸ்ட்யின்டீஸ் போன்ற நாடுகள்ஐஊஊயின் தரவரிசை பட்டடியலில் முதல், மத்திய இடங்களை இழந்து இறுதி இடத்தை அடைந்து வருகின்றது. வீரர்களுக்கு மத்தியில் காணப்படும் வெள்ளையன் கருப்பன் எனும் நிற வேறுபாட்டுச் சர்ச்சையே இதற்கு காரணமாகும். இச்சர்சையில்
ஆபிரிக்க நாட்டு வீரர்களுக்கு மத்தியில் காணப்படும் நிற வெறியைப் போன்ற மனோ நிலையை அ.இ.ம. காங்கிரஸின் பொத்துவில் பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையில்; காணக்கூடியதாகவுள்ளது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்மை, தான்தான் பெரியவர்கள் எனும் மெத்தை என்னம் மற்றும் அடுத்தவர்களின் ஆளுமையை மதியாமை போன்றவற்றை அடையாளத்திற்கு எடுத்துக்கூர முடியும். இத்தன்மையின் காரணத்தினால் தலைவர்களையும், வீரர்களையும் இழந்து நரிகளும் புலிகளும் அவ்வப்போது வந்து செல்லும் பாலடைந்த மைதானமாக காட்சி தந்து கொண்டிருக்கின்றது பொத்துவில் அரசியில் மைதானம்.
இந்திய கிரிக்கட் அணியின் தலைமதை;துவம் மஹிந்திர சிங் தோணியிடம் வழங்கப்பட்ட தொடராக இரு முறை உலகக் கோப்கையை கைப்பற்றியதுடன், கிரிக்கட் வரலாற்றில் பல சாதனைகளயும் நிலைநாட்டி இன்றுவரை கர்ச்சிக்கும் ஓரணியாக சர்வதேசத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அதே போன்று பொத்துவில் அரசியல் மைதானத்தில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்கு அவ்வூர் அணியின் தலைமைத்தும் முஷாரப் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே பத்துவருடமோ அல்லது பத்தாயிரம் வருடமோ தலைவராக இருந்;தவரும் புதிய தலைமைக்கு கட்டுப்படுதல் அவசியமாகும். இல்லையாயின் அவர் தலைவராலும் அணியின் பயிற்றுவிப்பாளராலும் அணியை விட்டு ஓரம் கட்டப்படுவதை யாராலும் தவிக்க முடியாத ஒன்றாகும். ஹர்பஜன் சிங், லாசித் மாலிங்க போன்ற மிகவும் திறமையான வீரர்களின் நிலையை உதாரணம் கூறமுடியும்.
நிறச்சர்சையை குழிதோண்டி புதை;துவிட்டு நாமெல்லாம் ஓரணியினர். எமது பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பால் எதிரணி வீரர்களை துவேம்சம் செய்து நாட்டுக்கும் நமக்கும் வெற்றியை தேடிக் கொள்வதே நமது இலக்கு என்ற உறுதியான சமநிலை மனோநிலைக்கு வந்த பின்பே கருப்பு, வெள்ளை கலந்த சௌத்தாபிரிக்க கிரிக்கட் அணியினால் இலங்கiயின் 300 ஓட்டங்கள் எனும் இமாலய சாதனையை முறியடிக்க முடிந்ததுடன் இன்றுவரை சிறப்பான இளம் தலைவர்ளையும், சிறப்பான வீரர்களையும் உருவாக்கி வருகின்றது.
எனவே பொத்துவில் மண் சுபீட்சம் பெற வேண்டுமாயின் சௌத்தாபிரிக்க அணி வீரர்களின் மனோ நிலைக்கு பொத்துவில் மக்கள் குpறப்பாக அ.இ.ம.காங்கிரஸ் தொண்டர்கள் மாற்றம் பெற வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.
மறுமுனையில், அணியின் நம்பிக்கை நச்சத்திர மற்றும் முதல்தர வீரர்கள் முதல் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் சென்றாலும் தன்னம்பிக்கையோடு ஆடுகளமிறங்கு வெழுத்து வாங்கி அணிக்கு வெற்றியை சுவைக்கக் கொடுக்கும் குமார் சங்கக்கார, தோனி, விராட் கோலி போன்றவர்களின் பட்டியலில் உள்ளவர்தான் முஷாரப் என்பதை மறுப்பதற்கோ அல்லது மறைப்பதற்கோ முடியாது.
Post a Comment