Top News

மாயக்கல்லி மலை பகுதியில், விகாரை அமைக்க காணி வழங்குவதில்லை


– முன்ஸிப் அஹமட் –

னாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரை, மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் அமைப்பாளர் கே.எல். சமீம் கொண்டு வந்த பிரேரணைக்கு இணங்க, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண அமைப்பாளர் எஸ்.ஐ. மன்சூர் ஆகியோர் தலைமையில், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.எம். நசீரின் நெறிப்படுத்தலுடன் நடைபெற்றது.
இதன்போது, இறக்காமம் மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள் புத்தர் சிலையை முன்னிறுத்தி, அங்கு பௌத்த விகாரையொன்றினை அமைப்பதற்காக, 01 ஏக்கர் காணியினை வழங்குவதற்கு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எடுத்துள்ள தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது எனத் தெரிவித்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் அமைப்பாளர் சமீம், பிரேரணையொன்றினை முன்வைத்தார்.
இந்தப் பிரேரணைக்கு இணங்க, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரை, மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரையை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post