பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞருக்கு ஆதரவாக கொழும்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த இளைஞர் தொடர்பில் விரைவான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மாலை கொழும்பில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையான மொஹமட் நிசாம்டீன் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான திட்ட ஆவணங்கள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என சிட்னி புலனாய்வு அதிகாரி மைக்கல் மெக்டிமென் சந்தேகம் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில், குறித்த இளைஞருக்கு ஆதரவாக கொழும்பில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment