கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , "கிழக்கு மாகாண காணி ஆணையாளருக்கு இறுதி முடிவு எடுக்கப்படும் வரை தனது கடிதத்தை இரத்துச் செய்யுமாறு" ஏன் கடிதம் அனுப்பவில்லை ? என சட்டத்தரணி பாறூக்சாஹிப் கேள்வி
இன்று கிழக்கு ஆளுனரைச் சந்தித்த SLMC உயர் மட்டக் குழு செய்தது முற்றிலும் ஒரு அரசியல் படமும் நாடகமும் ஒரு மக்களை ஏமாற்றும் வேலையும் என நான் பார்கிறேன் என சட்டத்தரணி பாறூக்சாஹிப் தெரிவித்தார்.
இன்று கிழக்கு ஆளுனரைச் சந்தித்த SLMC உயர் மட்டக் குழு செய்தது முற்றிலும் ஒரு அரசியல் படமும் நாடகமும் ஒரு மக்களை ஏமாற்றும் வேலையும் என நான் பார்கிறேன் என சட்டத்தரணி பாறூக்சாஹிப் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் "முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்" வந்த கடிதத்தை கடிதம் ஒன்றின் மூலமாகவே தடுக்க வேண்டும்
இறக்காமம் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் 2018.08.07 ம் திகதி கடிதம் வந்துள்ளது அவருக்கு மீண்டும் எழுத்து மூலம் மேற்படி கடிதத்தை அமுல்படுத்த வேண்டாம் என உயரதிகாரியின் கடிதம் வரும் வரை அவரால் காணி வழங்காமல் இருக்க முடியாது.
ஏன் இறக்காமம் மக்கள் மீது அக்கறை கொண்ட கௌரவ அமைச்சரவை அமைச்சரால் பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப் படவில்லை ?
பிரதேச செயலாளர் தொலைபேசி அழைப்புக்கு வேலை செய்பவர் அல்ல அவர் ஒரு அதிகாரி எழுத்து மூல ஆவணம் வேண்டும்
உடனடியாக SLMC MP மாரும் அமைச்சர் மாரும் தமது Letter Head ல் இறக்காமம் மக்களோடு உண்மையான அன்பு இருந்தால் கிழக்கு மாகாண காணி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி விட்டு பிரதேச செயலாளருக்கு பிரதியை அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன் இல்லை என்றால் இறக்காமம் பக்கமே தலை வைத்துப் படுக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார் .
Post a Comment