கண்டி கலவரம் : இனவாதி அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேருக்கு தொடர் விளக்கமறியல்

NEWS


கண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேருக்கும் எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அமித் வீரசிங்க கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.சந்தேகநபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் ஷானக கலன்சூரிய முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

இதன்போது, சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெறுவது தொடர்பாக தீவிரவாத விசாரணை பிரிவு (TID) அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திகண உள்ளிட்ட பகுதியில், கடந்த மார்ச் 05 ஆம் திகதியளவில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள், கடைகள், வீடுகள் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் சுமார் 30 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதில் பலர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top