Top News

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் பல சரத்துகள் 3/2 பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றம் இன்று கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் 2 இலிருந்து 13 வரையிலான சரத்துகள் மற்றும் 15ஆம், 16 ஆம், 19 ஆம், 20 ஆம், 21 ஆம், 22 ஆம் சரத்துகள் 3/2 பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.
அத்துடன், 23 ஆம், 24 ஆம், 28 ஆம், 29 ஆம், 31 ஆம், 32 ஆம் சரத்துகளுக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் ஏற்புடையது என பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
34 ஆம், 35 ஆம், 36 ஆம், 37 ஆம் சரத்துகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84/2 ஆம் பிரிவின் கீழ் விசேட பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
17 ஆம், 18 ஆம், 24 அம் 25 ஆம், 31 ஆம் 33 ஆம் சரத்துகளுக்காக அரசியலமைப்பின் 82/5 ஆம் பிரிவின் கீழ் விசேட பெரும்பான்மை அவசியம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் கூறினார்.
சரத்துகள் மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் நிறைவேற்ற வேண்டும்
Previous Post Next Post