சவூதி அரேபிய தூதரகத்துக்குச் சென்ற 7நிமிடத்துக்குள் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார்-நியூயார்க் டைம்ஸ் செய்தி

NEWS
செய்தியாளர் ஜமால் கசோக்கி இஸ்தான்புல் சவூதி அரேபிய தூதரகத்துக்குள் சென்ற 2 நிமிடத்துக்குள் தாக்கப்பட்டதாகவும், 7 நிமிடத்துக்குள் உயிரிழந்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால் கசோக்கி, அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மானைக் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் கடந்த ஆண்டில் நாட்டைவிட்டு வெளியேறி வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டிலும், பல்வேறு தொலைக்காட்சிகளிலும் சவூதி அரேபிய அரசை விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதிஅரேபிய தூதரகத்துக்கு அக்டோபர் இரண்டாம் நாள் சென்ற அவர் அங்கு நிகழ்ந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதை முதலில் மறைத்த சவூதி அரேபிய அரசு, தூதரகத்துக்குள் துருக்கி அதிகாரிகள் சென்று விசாரணை நடத்திய பிறகு கடந்த சனிக்கிழமை ஒப்புக்கொண்டது.

தூதரகத்துக்குள் கசோக்கி நுழைந்த இரண்டு நிமிடத்துக்குள் அவர் தாக்கப்பட்டதாகவும் ஏழு நிமிடத்துக்குள் அவர் கொல்லப்பட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 
6/grid1/Political
To Top