GSP+ வரிச் சழுகையை பெற்றுக்கொள்வதற்க்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைத்து தமக்கு ஏற்றாட்போல் திருத்தம் செய்ய முனைந்த அரசாங்கத்தை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் சகோ. அப்துர் ராசிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது தொடர்பான வழக்கு கொழும்பு, நீதவான் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நீதிபதி லஸஞ்சலா பெரேரா முன்னிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரனையில் எதிர்வரும் ஜனவரி 10ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன், மைத்திரி குணரத்ன, நுஷ்ரா ஸரூக் மற்றும் அக்ரம் ஆகியோர் ஆஜராகினர்.
ஊடகப் பிரிவு,
சிலோன் தவ்ஹீத் ஜமாத் - CTJ
Post a Comment