மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனன தின ஞாபகார்த்த கொண்டாட்டங்களின் ஆரம்பத்திற்கான ஒரு தொடரான நிகழ்வுகள் ஒக்டோபர் 2 ஆம் திகதியன்று நடைபெற்றன. அடுத்த இரண்டு வருடங்களின் போது காந்தியின் வாழ்க்கை மற்றும் தத்துவங்கள் தொடர்பானவை மீது கவனம் செலுத்தும் மேலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி 1927 இல் இலங்கைக்கான அவரது விஜயத்தின் போது இங்கு அதிளவிற்கு பயணம் செய்துள்ளார்.
மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு விசேட நிகழ்ச்சியை நடத்தினார். இலங்கையின் பிரபல்யமான இசைக் கலைஞர்களான பாத்திய, சந்தோஷ; மற்றும் உமாரியா தோன்றி காந்தியினால் விரும்பப்பட்ட 'வைஷ;ணவ ஜன' எனும் பஜனைப் பாடுகின்ற ஒரு விசேட காணொலியை இந்திய உயர் ஸ்தானிகராலயம் உருவாக்கியது. இந்தக் காணொலி இன்றைய நிகழ்வில் மேதகு ஜனாதிபதியினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்திய உயர் ஸ்தானிகர் தரண் ஜித் சிங் சந்து ஜனாதிபதி சிரிசேன அவர்களிற்கு மகாத்மா காந்தியின் ஓர் உருவப் படத்தைப் பரிசளித்தார். ஜனாதிபதி சிரிசேன இந்திய உயர் ஸ்தானிகரிற்கு நன்றி தெரிவித்ததுடன் காந்திஜியின் உருவப்படம் ஜனாதிபதி அலுவலகத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என அறிவித்தார்.
காந்திஜிக்கான ஓர் அஞ்சலியாக, அலரி மாளிகையில் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஒரு தொகுதி விசேட ஞாபகார்த்த முத்திரைகள் வெளியிட்டு வைக்கப்பட்டன.
சுவாமி விவேகானந்த கலாச்சார நிலையத்தில் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் திரு. சம்பத் பண்டார அவர்களால் இலங்கையில் காந்தியின் விஜயம் பற்றி நன்கு ஆராய்ந்து சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒரு நூல் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
வயலின் இசை வித்தகர் மாஸ்ட்ரோ கலாநிதி. எல். சுப்பிரமணியன் அவர்களினால் ஒரு விசேட இசை நிகழ்ச்சியும் மற்றும் தேசிய லெய்ப்ஜா லட்வியன் குழுமத்தினரின் இசைலயச் சங்கமமும் மாலைப் பொழுதில் தாமரைத் தடாக அரங்கில் நிகழ்வுற்றது. இந்த நிகழ்வு கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, கௌரவ அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், ஆளுனர் ஹேமக்குமார நாணயக்கார மற்றும் கலாச்சார, தொழில்துறைசார், கல்வி மற்றும் வர்த்தகத் துறை சார்ந்த மதிப்பு மிக்க பிரபல்யமானவர்களினால் கலந்து கொள்ளப்பட்டது.
கொழும்பின் அடையாளங்களிலொன்றான கொழும்பு மாநகரசபைக் கட்டிடம் காந்திஜியின் உருவப்படத்தைக் காட்சிப்படுத்துவதற்கு விசேட லெட் விளக்குகளினால் ஒளியூட்டப்பட்டிருந்தது.
Series of events were held on 2nd October to begin the 150th birth anniversary celebrations of Mahatma Gandhi. Many more events focusing on life and philosophy of Gandhi ji would be organised during the next two years. Mahatma Gandhi traveled extensively in Sri Lanka during his visit in 1927.
H.E. President Maithripala Sirisena held a special programme to pay tribute to Mahatma Gandhi at the Presidential Secretariat. High Commission of India has created a special Video “Vaishnav Jana To”, a bhajan liked by Gandhi ji, sung by popular Sri Lankan artists – Bathia, Santhush and Umaria. The video was launched at the event by H.E. President Sirisena. H.E. High Commissioner Taranjit Singh Sandhu gifted a portrait of Gandhi ji to H.E. President Sirisena. H.E. President Sirisena thanked High Commissioner and announced that the Gandhiji’s portrait would be permanently displayed at the President’s office.
As a tribute to Gandhi ji, special commemorative postal stamps were released by Hon. Prime Minister Ranil Wickremesinghe at Temple Trees.
Hon. Speaker Karu Jayasuriya launched a well-researched book in Sinhalese on Mahatma Gandhi’s visit to Sri Lanka, written by veteran journalist Mr Sampath Bandara at Swami Vivekananda Cultural Centre.
A special musical performance by the Violin Maestro Dr. L. Subramaniam and the National Leipaja Latvian Philharmonic Orchestra was held at Nelum Pokuna auditorium in the evening. The event was attended by Hon. Speaker Karu Jayasuriya, Former President Chandrika Bandaranaike Kumaratunga, Prof. Maithree Wickremesinghe, Hon Minister Wijeyadasa Rajapakshe, Hon. Leader of Opposition R Sampathan, Governor Hemakumara Nanayakkara, and many other distinguished dignitaries from cultural, professional, academic and business areas.
Iconic Colombo Municipal Town Hall was lit with special LED lights to showcase Gandhi ji’s images.
Post a Comment