பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நலக டி சில்வாவை இன்று (18) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அங்கு ஆஜராகியிருக்கவில்லை.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நலக டி சில்வா மீதான விசாரணைகள் பக்கச் சார்பின்றி இடம்பெறும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார கூறியுள்ளார்.
பின்னிணைப்பு - மு.ப. 10.00
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நலக டி சில்வா சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வௌியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.