Top News

நாலக டி சில்வா, நாமல் குமார ஆகியோர் நீதிமன்றில் ; வெளிநாடு செல்வதற்கு தடை

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர்.


ஜனாதிபதி உட்பட அரச தலைவர்களை கொலை செய்வதற்கான சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமாரவினால் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா பேசியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரை நீதிமன்றில் இன்று (08-10-2018) ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் ஆஜராகுமாறு கடந்த 5 ஆம் திகதி உத்தரவிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த இருவரும் இன்று நீதிமன்றில் ஆ ஜராகியுள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகிய பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோர்  வெளிநாடு செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post