Top News

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி விருது

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, இந்த வருடத்துக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருதைப் பெற்றுள்ளது. இந்த விருதை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பெற்றமை இதுவே முதற்தடவையாகும்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகரான டொக்டர் ஐ.எம். ஜவாஹிரின் தலைமைத்துவத்தின் கீழ், இவ்விருது பெறப்பட்டுள்ளது.
சுற்றாடலைப் பேணும் தொழிற்சாலைகள், சேவையாளர்கள் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கப்படுகிறது.
நீலப் பசுமை யுகமொன்றை இலங்கையில் ஏற்படுத்துவதற்காக, மகாவலி அபிவிருத்தி அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் “ஸ்ரீ லங்கா நெக்ஸ்ட்” செயற்றிட்டத்தின் கீழ், இந்த விழா நடத்தப்பட்டு வருகின்றது.
சுற்றாடல் அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த வருடத்துக்கான மேற்படி விருது வழங்கும் விழா, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, ஐந்து வைத்தியசாலைகள், ஜனாதிபதி சுற்றாடல் விருதைப் பெற்றுக் கொண்டன.
அதற்கிணங்க, அம்பாறை பொது வைத்தியசாலை தங்க விருதையும், அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆதார வைத்தியசாலைகள் வெண்கல விருகளையும் பெற்றுக் கொண்டன. வைத்தியசாலைகளுக்கான வெள்ளி விருது, இம்முறை வழங்கப்படவில்லை.


அதேவேளை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, இதன்போது சிறப்பு விருதைப் பெற்றுக்கொண்டது.
ஒட்டுமொத்தமாக, ஜனாதிபதி சுற்றாடல் விருதைப் பெற்றுக் கொண்ட 05 வைத்தியசாலைகளில், நான்கு வைத்தியசாலைகள், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவை என்பது சிறப்பம்சமாகும்.
Previous Post Next Post