கொழும்பு சிறைச்சாலைகளில் வெளியாட்கள் வருகை தருவதை பரிசோதிக்க பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று முதல் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, வெலிக்கட, மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை ஆகியவற்றில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளளார்.
இதற்கிடையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை பணிக்கு அமர்த்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகுணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும், சிறைச்சாலை பாதுகாப்பிற்காக அரசினால் எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என குறித்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.