Top News

அமைச்சர் பைசர் முஸ்தபாவின் இனநல்லிணக்கச் செயற்பாடு

மாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரான லுாஹிரு மடுசாந்தவை விடுவிப்பது தொடர்பாக மாகாண சபைகள் உள்ளூராட்சி விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மாலைத்தீவு ஜனாதிபதி இப்றாஹிம் முஹம்மத் சோபியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கை சிங்கள இனத்தைச் சேர்ந்த லுாஹிரு மடுசாந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் இவர் கடந்த மூன்றறை வருடங்களுக்கு முன்னர் மாலைத்தீவு அரசாங்கத்தினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயங்களை அறிந்து கொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா கடந்த சனியன்று தனது சொந்தச் செலவில் மாலைத்தீவுக்குச் சென்று நமது நாட்டு இளைஞர்  லுாஹிரு மடுசாந்தவை விடுவிப்பது தொடர்பாக மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி உட்பட அரசின் உயர்மட்டப் பிரிதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நபர் மாலைதீவின் ஜனாதிபதி  அப்துல் யமீனை கொலை செய்ய சிதி செய்ததாக கைது செய்யப்பட்டார்.இவரின் மனைவி பிள்ளைகளுடன் அமைச்சர் பைசர் முஸ்தபாவைச் சந்தித்து தனது கணவர் எந்தக்குற்றமும் செய்யாத நிரபராதி என்றும் அவர் தொடர்பான வழக்கு விசாரணை நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டுவருதாகவும் அமைச்சரின் கவனத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் இவரை விடுதலை செய்ய வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் பைசர் முஸ்தபா ஜனாதிபதியின் துாதுவராக மாலைதீவுக்கு விஜயம் செய்தார் மாலைதீவின் புதிய ஜனாதிபதியைச் சந்தித்த முதலாவது இலங்கை அமைச்சர் பைசர் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பைசர் முஸ்தபா மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஸிஹுடனும் இதுவிடயமாக பேச்சுவார்த்தை நடாத்தி இப்பொறுப்பினை அவரிடம் ஒப்படைத்து விட்டு இலங்கைக்கு அமைச்சர் வருகைதந்தார்.

இனவேறுபாடுகளுக்கப்பால் செயற்பட்டுவரும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சர் பைசர் முஸ்தபாவின் இச்செயற்பாடு இனநல்லிணக்கத்திற்கான ஒரு முன் உதாரணமாகும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

(எம்.ஐ.எம்.றியாஸ்)
Previous Post Next Post