தென்கிழக்குப் பல்கலை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது!

Ceylon Muslim
தென்கிழக்குப் பல்கலைக்கழக சகல பீடங்களும் கால வரையறையின்றி மறு அறிவித்தல் வரைநேற்று(24) மாலை 04.00 மணி முதல் மூடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.

சகல பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், சகல பீட மாணவர்களும் மாலை 04.00 மணிக்கு முன்னர் பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறுமாறு நேற்று அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதோடு, தடை செய்யப்பட்ட வலையமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.இக் கட்டளையை மீறி செயற்படும் மாணவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் மேலும் கூறினார்.

நீதிமன்றக் கட்டளையை மீறி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் கடந்த ஒரு வார காலமாக பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிருவாக கட்டடத்தை ஆக்கிரமித்து முன்னெடுத்துவரும் சத்தியக்கிரக போராட்டத்தினால் அதிகாரிகளுக்கு தமது கடமைகளைச் செய்ய முடியாது இடையூறு விளைவித்து வந்துள்ளனர். இதையடுத்தே சகல பீடங்களும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும், பதிவாளர் எச். அப்துல் சத்தார் மேலும் தெரிவித்தார்.
6/grid1/Political
To Top