முஸ்லிம்களின் விவாக விவாகரத்து மற்றும் திருமணம் பற்றிய பிணக்குகளை தீர்க்கும் நீதிமன்றமாக இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள குவாசி நீதிமன்றங்களில் நீதிபதியாக ஆண்களே உள்ளனர், இது மார்க்க அடிப்படையில் அமையப்பெற்றுள்ளது இதனை மாற்ற முடியாது எனின் குறித்த வழக்குகள் நடக்கும் இடத்தில் அல்லது நீதிமன்றத்தில் முஸ்லிம் பெண் அதிகாரி (சட்டத்தரணி) ஒருவர் கட்டாயம் நியமிக்கப்படவேண்டும் என மனித உரிமைகள் மற்றும நீதியை பாதுகாக்கும் சமாதான நீதவான்கள் பேரவையின் தலைவர் பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்.
அச்சு ஊடகங்களுக்கு அமைப்பின் கடித உறையில் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அந்த அறிக்கையில்,
முஸ்லிம்களின் திருமண பிணக்குக் அனைத்தும் குவாசி நீதிமன்றங்களில் இடம்பெறுகிறது, குறித்த பிணக்குகளை ஒரு மார்க்க அறிஞர் (மௌலவி) அல்லது, ஓய்வுநிலை அதிகாரி, சமூகத்தின் மூத்த பிரஜை நீதிபதியாக இருந்து தீர்த்து வைக்கிறார், பல பிணக்குகள் தீர்க்கப்படாமையிலேயே முடிகிறது. குறித்த வழக்கில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே, அந்தரங்கமான வழக்குகளும் உள்ளது, உதாரணமாக பாலியல் ரீதியிலான கேள்விகள், உடலுறவு சம்பந்தப்பட்ட கேள்வகள் இவைகளை ஒரு ஆணிடம் எவ்வாறு மனம் திறந்து ஒரு பெண் கேட்க முடியும், இன்னுமொருபுறம் ஆண் சிலவேளை ஆணுக்கு (ஆணாதிக்க சிந்தனையில்) ஆதரவு வழங்கவும் முடியும். இவைகளை தடுக்கும் பொருட்டு இலங்கை நீதித்துறை கட்டாயம் பெண்குறைகேள் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
நீதிபதி நியமனங்களில் அரசியல் தலையீடு இன்றி மார்க்க சட்டம் அறிஞர், அல்லது சட்டதரணி நியமிக்கப்படல்வேண்டும், சட்டதரணியை நியமிப்பது அனைத்தையும் விட சிறந்தது, இன்று அதிகம் முஸ்லிம் சட்டத்தரணிகள் நிறைந்து காணப்படுகின்றனர். இது குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.