Top News

நாலக்கவின் கல்வித் தகைமை குறித்து விசாரணை!

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின் கல்வித் தகைமை மற்றும் அவரது உயரம் தொடர்பில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள முறைபாடுகளுக்கு அமைய, பொலிஸ் அதிகாரிகள் மூவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவில் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, எல்பிட்டிய பொலிஸ் அதிகாரி நிஹால் தல்துவ மற்றும் கொழும்பு குற்றபிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி பிரசன்ன அல்விஸ் ஆகிய மூவரே இவ்வாறு வாக்குமூலமளித்துள்ளனர்.
தேவையான கல்வித் தகைமை மற்றும் குறிப்பிடப்பட்ட தகுதி இல்லாமலேயே நாலக சில்வா பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த பொலிஸ் அதிகாரிகள் மூவரும் வாக்குமூலமளித்துள்ளனர்.
அத்துடன், பொதுமக்கள் நிதியை செலவிட்டு, நாலக சில்வாவுக்கு சம்பளம் போன்ற கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளமையானது ஊழல் என்றும் அவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.
இதேவேளை நாலக சில்வாவின் கல்வித் தகைமைக் குறித்து, களுத்துறை மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இதற்கு முன்னர் இலஞ்ச ஒழிப்பு விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post