Top News

பொலிஸாருக்கெதிராக தென் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்துவதில், பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதனைக் கண்டித்து பல்கலைக்கழக சமூத்தினால் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக இடம்பெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 தென்கிழக்குப் பல்கலைக்ககழக நிருவாகக் கட்டடிடத் தொகுதியை ஆக்கிரமித்து பல்கலைக்கழகத்தின் நிருவாக செயற்பாட்டிற்கு தடையாக இருந்துவரும் மாணவர்களுக்கெதிராக பல்வேறுபட்ட சட்ட நடவடிக்கைகள் பல்கலைக்கழக நிருவாகத்தினால் எடுக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப் படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதனைக் கண்டித்தே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.




தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடம் மற்றும் பொறியல் பீடம் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களை வெளியேற்றியதைக் கண்டித்தும், அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியும் தென்கிழக்கு  பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பல்கலைக் கழகத்தின் நிருவாகக் கட்டடத் தொகுதியை ஆக்கிரமித்து கடந்த 12 ஆம்திகதி முதல்  10 நாட்களாக  போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் பல்கலைக்கழக நிருவாகம் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு தெரிவித்தனர். இதனையடுத்து பொலிஸார் நீதிமன்ற தடைஉத்தரவைப்பெற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு எத்தனித்த போதும் மாணவர்கள் அதனையும் எதிர்த்து தொடா்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post