Top News

ஜமால் கொலையில் அமெரிக்காவுக்கு தொடர்புள்ளது - ஈரான்

சவூதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி (வயது 59)  கடந்த 2–ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றபோது கசோகி கொல்லப்பட்டார். 

இந்த நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தொலைக்காட்சி ஒன்றில் இன்று -24- பேசும்பொழுது, அமெரிக்கா நாட்டின் ஆதரவின்றி இதுபோன்ற செயலை துணிவுடன் எந்த நாடும் செய்திருக்கும் என நான் நினைக்கவில்லை என கூறினார்.

சவூதி அரேபியாவை ஆளும் பழங்குடி குழுவானது பாதுகாப்பு எல்லையை கொண்டது. இந்த பாதுகாப்பு எல்லையானது அமெரிக்க ஆதரவை சார்ந்தது. அமெரிக்காவே அவர்களுக்கு ஆதரவு தரும் சூப்பர் பவராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தங்களது ஆதிக்கத்தினை நிலைநிறுத்த சன்னி பிரிவு முஸ்லிம்களை கொண்ட அரேபிய அரசும், ஷியா பிரிவு கொண்ட ஈரான் நாடும் நீண்ட காலம் ஆக போராடி வருகிறது.
Previous Post Next Post