அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (25) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது, அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச தவிசாளர் உட்பட தேசிய காங்கிரஸை பிரதிநிதிப்படுத்தும் உறுப்பினர்கள் எவரும் சமூகமளிக்காமல் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தை பகிஷ்கரித்துள்ளதாக சிலோன் முஸ்லிம் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், அக்கரைப்பற்றை தளமாக கொண்டு இயங்கும் நிருவாக அதிகாரிகளில் சிலர் கலந்துகொள்ளவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை பிரதேச இருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை ஆகியோரின் இணைத்தலைமையில் கூட்டம் ஆரம்பித்தது.
தேசிய காங்கிரஸின் முன்னாள் பிரதி தலைவரும், முக்கியஸ்தருமான எம்.எஸ். உதுமாலெப்பையும் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பதாலயே தேசிய காங்கிரஸின் மாநகர, பிரதேச சபை தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள் இந்த பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.