Top News

ரிசாத் பதியுதீனை ஏன் 04ஆம் மாடிக்கு, குற்ற புலனாய்வு பிரிவு அழைத்தது (VIDEO)


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியூதின் நான்காம் மாடி எனப்படுகின்ற சி.ஐ.டிக்கு (குற்ற புலனாய்வு பிரிவு) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் மக்கள் காங்கிரஸ் ஆகியன பங்காளிக்கட்சியாக அங்கம் வகிக்கின்றது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக போராடிவருகின்றார். அரசமைப்பின் பிரகாரமே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என்றும், சூழ்ச்சி நடவடிக்கைக்கு துணைபோக முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் ரிசாட் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறித்து அரசியல் களத்தில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

” அரசமைப்பின் பிரகாரம் செயற்படுமாறே எமது மார்க்கம் சொல்கின்றது. அதை எம்மால்மீற முடியாது. சூழ்ச்சிக்கு துணைபோக முடியாது.

எனக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது. நாமல் குமார என் பெயரை பயன்படுத்தியுள்ளார். ஆனால், எனது பெயர் மாத்திரம் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது. எனது கட்சியின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இருந்தும் எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. என்னிடம் வாக்குமூலம் பெறவேண்டும் என சி.ஐ.டியின் பணிப்பாளர் கோரியுள்ளார். சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவன் என்பதாலா எமக்கு இப்படியெல்லாம் நடக்கின்றது” என்றார். PUTHUSUdAr
Previous Post Next Post