Top News

இவ்வாண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு 650,641 பரீட்சார்த்திகள்!

இவ்வருடம் நடைபெறவிருக்கின்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு நாடாளவிய ரீதியில் 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.பிரகாசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் க.பொ.த. பரீட்சைகள் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்றில் இன்று (வியாழக்கிமை) கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அந்த வகையில், பொது சாதாரணப் பரீட்சைக்கு 422,850 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 233,791 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர்.இப்பரீட்சையானது 4,661 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. 

பரீட்சைக்காக 541 இணைப்பு நிலையங்களும், 33 பிராந்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.விஷேட பரீட்சை நிலையங்களாக இரத்மலான, தங்கல்ல, சிலாபம் மற்றும் சிறைச்சாலைகள், வைத்தியசாலைகளிலும் பரீட்சை ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
Previous Post Next Post