அலரி மாளிகையில் இன்றிரவு 7 மணிக்கு விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால், அடுத்த கட்ட அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்காக இந்த விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது என்பதால், அதற்கு முன்னர் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.