ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை வகிக்க வேண்டுமாயின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பதவி வெற்றிடமாக காணப்படுகின்றது. ஆகவே அப் பதவியை அவர் பெற்றுக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் டளஷ் அழகப்பெரும தெரிவித்தார்.
மேலும் தேசிய அரசாங்கத்தின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி செயற்படவில்லை. அவர் மேற்குலக நாடுகள், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் போன்ற அமைப்புகளுக்காகவே செயற்பட்டார். எனவே அவர்களே ரணிலை ஆதரிப்பார்கள்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்நாளில் மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் எனறு உறுதியளித்துள்ளார். சிலவேளை மீண்டும் ரணில் பிரமராகினால் எவ்வாறான விளைவுகளை நாடு எதிர்கொள்ளும் என்பதை அவர் நன்கு அறிவார் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.