உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் பைசா் முஸ்தபா நேற்று முன்தினம் ஜனாதிபதி சிறிசேனாவின் பிரநிதியாக மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் இலங்கை அரச பிரநிதியாகக் கலந்து கொண்டடாா்.
இச் சா்ந்தாப்பத்தில் இலங்கையைச் சோ்ந்த லகிறு மதுசங்க 27 வயதுடையவா் கடந்த 3 வருட காலமாக அங்கு சிறையில அடைக்கப்பட்டுள்ளதை விடுதலை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சா் களுடன் பேச்சுவாா்த்தை நடாத்தியாக அமைசசா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா்.
மதுசங்க மனைவி மற்றும் தனது ஒரு குழந்தை இழந்து அங்கு சிறையில வாடுவதையிட்டு அவரது மனைவி உறவினா்கள் அமைச்சா் பைசா் முஸ்தபாவைச் சந்தித்து தனது கனவரை விடுலை பெற்றுத் தருமாறு கோரியிருந்தனா். அதற்கமைவாக கடந்த மாதமும் அமைச்சா் பைசா் முஸ்தாப அங்கு விஜயம் மேற்கொண்டு புதிய ஜனாதிபதியிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுப்ட்டாா். இம்முறையும் அவரது விஜயத்தின் போதும் திரு மணிகந்தரைவை விடுதலை பெற உரிய அதிகாரிகளை சந்தித்தாா்.
திரு மதுசங்க முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்த முயற்சி எனும் சந்தேகத்தின் பேரிலேயே கடந்த 2015 ஒக்டோபா் 15ஆம் திகதி அங்கு கைது செயயப்பட்டு சிறையில் அடைக்க்பட்டாா்.
நேற்று அவா் இருக்கும் சிறைச்சாலைக்கும் அமைச்சா் பைசா் முஸ்தபா சென்று பாா்வையிட்டாா். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி முஹம்மட் நசீட்டையும் சந்தித்துடன் அந்த நாட்டின் புதிய நீதி யமைச்சா் மற்றும் சட்ட அலுவலகரையும் சந்தித்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதாக அமைச்சா் பைசா் தெரிவித்தாா்.
இவ் விடயம் சம்பந்தமாக அமைச்சா் பைசா் முஸ்தபா ஊடகங்களுக்கு தகவல் தருகையில் இலங்கை -மாலை தீவின் புதிய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி முஹம்ம் நசீட் ஆகியோா்களுடன் மிகவும் நெருங்கி நல் உறவுகளை வளா்த்து வருகின்றது.
இலங்கையரான மணிக்கந்துர கடந்த 3 வருட காலமாக வழக்கு தொடாரப்பட்டு குற்றம் சுமத்தப்படாமல் சந்தேகத்தின் பேரில் கைது செய்துல்லவரை மிக விரைவில் விடுதலை செய்வதற்கு சம்பந்தப்பட்ட சகல மாலை தீவு சட்டமன்றம், நீதியமைச்சு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதாகவும் மிக விரைவில் அவா் விடுதலை செய்யப்படுவாா் எனவும் அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா்.