Top News

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் ; கயந்த கருணாதிலக பா .உ !

அரசியலமைப்புக்கமைய 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் தேர்தல் ஒன்று இடம்பெற வேண்டுமானால் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பை பாதுகாப்பதாகவும், ஜனாதிபதியின் அதிகாரத்தால் உருவாகியுள்ள தற்போதைய பிரச்சினைக்கு தீர்வாகவும் ஜனாதிபதி தேர்தல் அமைய வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

மேலும் தற்போது நாட்டில் இடம்பெறும் அரசியல் சூழ்ச்சிகள் தொடர்பில் மக்கள் தெளிவடைந்தே உள்ளனர். இந்நிலையில் ஜனவரியில் பொது தேர்தல் இடம்பெறுமாயின் அது வீண் செலவாக அமைவதோடு ஆட்சி அமைப்பதற்கு சாதகமானதாகவும் அமையாது. மக்கள் தீர்ப்பு மற்றும் பொது தேர்தல் என்பதற்கு பதிலாக தற்போதைய நிலையில் சட்டத்துக்கமைய ஜனாதிபதி தேர்தலே நடத்த கூடியது. ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த அரசியல் மாற்றம் தொடர்பில் மக்களின் தீர்மானத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையமெனவும் அவர் வலியுறுத்தினார்.

அலரிமாளிகையில் (22-11-2018) புதன் கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Previous Post Next Post