Top News

பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் மேற்கத்தேய நாடுகளுக்கு அதிக வலியை ஏற்படுத்தியுள்ளது..

இலங்கை பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் மேற்கத்தேய நாடுகளுக்கு அதிகவலியை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷகுறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்திம் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்ற அவர், அதன்பின்னர்செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினர். 

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அவர்களது நாட்டு பாராளுமன்றில் இடம்பெறும் இதுபோன்ற வன்முறைகள்குறித்து வாய்திறக்காத தூதுவர்கள், இலங்கை விடயம் என்றவுடன்முண்டியடித்து கருத்து வெளியிடுவதாக வும் குற்றம் கமத்தினார். தங்களதுபிரச்சினை உலகிலுள்ள எல்லா நாடுக ளிலும் இடம்பெறுகின்றன.ஆனால்இலங்கையில் ஏற்படும்போது மாத்திரம் சில

மேற்கத்தேய நாடுகளுக்கு வலிக்கிறது.

அவர்களது நாடுகளின் பாராளுமன்றத்திற்குள் இவ்வாறான குழப்பங்கள்,சண்டைகள் இடம்பெறும் போது,அந்தந்த நாட்டு தூரதுவர்கள் கருத்துக்கள்எதனையும் வெளியிடுவதில்லை.

இலங்கை பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து கவலையடைவதாக சிலமேற்கத்தேய நாட்டு தூது வர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். கடந்தகாலங்களில் அவர்களின் நாடாளுமன்ற அமர்வுகளிலும் இது போன்றசம்பவங்கள் இடம் பெற்றன.அதன் போது,அவர்கள் அமைதியாக இருந்தனர்.

பாராளுமன்றத்திலிருந்தாலும், வெளியில் இருந் தாலும் நாம் எல்லோரும்மனிதர்கள்.அவ்வப்போது சில அசம்பாவிதங்களும் ஏற்படும்.என்றபோதிலும்225 உறுப்பினர்களும் எந் தவொரு சம்பவத்தையும் அனுமதிப்பதில்லை.எனினும்பாராளுமன்றில் சபாநாயகரின் பிழையான செயற்பாடுகளினால், சிலஅரசியல் தீர்மானங்களை எடுக்கும் போது, தமது ஆவேசத்தை கட்டுப்படுத்தமுடியாமல் போகும் சந்தர்ப் பங்களும் உண்டாகும். 

சபாநாயகர் சரியாக செயற்பட்டு, நிலையியற் கட்டளைக்கு அமையசெயற்பட்டு பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பாதுகாப்பாராயின்இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாது என்றார்.
Previous Post Next Post