அமர்வுகள் முறைகேடு, ஹன்சாட்டையும் ஏற்க முடியாது - சபாநாயகருக்கு கடிதம்

NEWS
இன்றை பாராளுமன்ற அமர்வினை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சற்று முன்னர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில், கடந்த 14,15,16,19 மற்றும் 21,23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாராளுமன்ற செயற்பாடுகள் அரசியலமைப்பிற்கும், பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு ஏற்பவும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அன்றைய தினங்களில் வெளியிடப்பட்ட ஹன்சாட் அறிக்கைகளை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், ஆகவே அந்த ஹன்சாட் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அந்த கடிதத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தியிருக்கின்றார்கள். 
6/grid1/Political
To Top