Top News

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவர்,உப தலைவர் நியமனம் !


வீடமைப்பு மற்றும் சமுக நலன்புரி அமைச்சர் விமல் வீரவன்சவினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக சட்டத்தரனி பாலித்த கமகேவும் உப தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா் முஹம்மட் முசம்மில் மற்றும் பணிப்பாளா்கள் சபையும் நியமிக்கப்பட்டுள்ளனா்.கடந்த திங்கட் கிழமை (19) புதிய தலைவா் பதவிப் பிராமாணம் செய்யும்போது அமைச்சா் விமல் வீரவண்ச சமுகமளித்திருந்தாா்.

அங்கு உரையாற்றிய அமைச்சா் விமல் வீரவன்ச -

கடந்த ஆட்சியில் நா்ன வீடமைப்பு அமைச்சராக பாரம் எடுக்கும்போது இந்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை ஊழியா்களுக்கு நஸ்ட ஈடு வழங்கி இந்த அதிகார சபையை மூடி விடும் பட்டியலில் இருந்தது. சனசெவன வீடமைப்புத் ்திட்டத்தினை நாடு புராவும் அறிமுகப்படுத்தி இந்த நிறுவனத்தினை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைத்தேன். இந்த அதிகார சபையினால் மக்களுக்கு செய்யக்கூடிய சகல சேவைகளையும் செய்து இதனை நிமிா்த்தி ஒரு சிறந்த ஒரு நிறுவனமாக தனது 6 வருட காலத்தினுள் மாற்றியமைத்தாகக் கூறினாா். அவ்வப்போது இந்த அதிகார சபையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கமைவாகே புதிய ஊழியா்களுக்கு நியமனம் வழங்கி அவா்களுக்கு நிரந்தர நியமனமும் பெற்றுக் கொடுத்தாக தெரிவித்தாா்.


ஆனால் முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா்ரது தொகுதியான ஹம்பாந்தோட்டைக்கு மட்டுமே இதன் சேவைகள் வளங்களை வீடமைப்பு கிராமங்களை கொண்டு சென்று அந்த மாவட்டத்திற்கும் மட்டுமே சேவை செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சா்ின் தேர்தல் மாவட்டத்தில் இருந்து சுமாா் 3000க்கும் அதிகமான தற்காலிக ஊழியாக்ள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் இருப்பதற்கு கூட கதிரைகள் கூட அலுவலங்களில் இல்லை ஊழியா்கள் சங்கீத கதிரை போன்று ஊழியா்கள் உள்ளனா். இதே போன்று 24 மாவட்டம்களிலும் உள்ள அலுவலங்களும் இதே நிலையில் உள்ளன. ஜ.தே. கட்சி சாா்ந்தவா்கள் அதுவும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் வசிப்போறுக்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜ.தே.கட்சி யுனியன் இந்த அதிகார சபையின் நிர்வாகத்தினை கையில் எடுத்து அவா்களுக்கு தேவையானோா்கள் நியமனங்கள் பதவி உயா்வுகள் வழங்கப்பட்டன.


நேற்று முன்தினமும் கூட இங்கு தொலில் செய்பவா்கள் கடமைக்கு வந்து விட்டு கொழும்பு நகர சபைக்கு அருகில் நடைபெற்ற ஜ.தே.கட்சி கூட்டத்திற்கே சென்றுள்ளனா்.இதில் ்இருந்து புலனாகின்றது. இந்த ஊழியா்களை தற்காலிக ஊழியா்களாக பதவிக்கு நியமித்து கட்சியின் கொடி கட்டுவதற்கும், கோசம் போடுவதற்குமே இவா்கள் பாவிக்கப்பட்டு வருகின்றனா். அத்துடன் தலைமைக் காரியாலயம் , புத்தளம் . அநுராதபுரம் மாவட்டக் காரியலாயங்களில் முன்றலில் நாட்டப்பட்ட நீல நிறக் கொடிகளையும் ஏறி அகற்றியுள்ளீா்கள் . ஆகவே இவ்விடயம் சம்பந்தமாக சம்பந்தப்பட்டவா்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பொது முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பித்தாா்.
Previous Post Next Post