நாட்டின் அரசியலில் ஓர் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்திருக்கின்றன.
இதன் முதற்கட்டமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாரா-ளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாரா-ளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில் நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு கடந்த தேர்தலில் சிறுபான்மைக்கட்சிளும், சிறுபான்மைச் சமூகமும் வழங்கிய ஒத்துழைப்புகளையும், பங்களிப்புகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விளக்கினோம்.
நாட்டில் சுமுக நிலையினை ஏற்படுத்தி மக்களின் சகவாழ்வினை உறுதிப்படுத்துமாறு கோரியிருக்கிறோம். மாகாண சபைத்தேர்தலை புதிய தேர்தல் முறையிலன்றி பழைய முறையிலே நடத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.
நாட்டின் ஸ்திரத்தன்மையை ஜனநாயக ரீதியில் நிலைநிறுத்துமாறும் ஜனாதிபதியைக் கோரியுள்ளோம்.
இதேவேளை அமைச்சுப் பதவிகள் பற்றி ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் பேசப்படவில்லை. எமக்கிடையே உள்ள ஒற்றுமையைக் குலைப்பதற்கு சில சக்திகள் முயன்று வருகின்றன என்பதையும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தோம்.
ஜனாதிபதியைப் பதவியில் அமர்த்துவதற்கு பங்களிப்புச் செய்துள்ள சிறுபான்மை சமூகத்துக்கு ஜனாதிபதி கடமைப்பட்டிருக்கிறார் என்பதையும் விளக்கினோம்.ன்பதையும் விளக்கினோம்.
அரசியல் களத்தில் மேற்கொள்ளும் தீர்மானம் இருகட்சிகளும் ஒன்றிணைந்தே மேற்கொள்ளும். அது ஜனநாயக ரீதியான தீர்மானமாக அமையும் என்றார்.
-Vidivelli
-Vidivelli