ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உயர்நீதிமன்றில் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமையானது சட்டவிரோதமானதென, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றில் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.