ஆட்சியதிகாரம் முக்கியமா? அல்லது நாடு முக்கியமா? என்பதை உடனடியாக ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும்!

Ceylon Muslim
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சியதிகாரம் முக்கியமா அல்லது நாடு முக்கியமா என்பதை உடனடியாக தீர்மானிக்க வேண்டும். 

ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் தொடர்ந்து சூழ்ச்சிகளை மேற்கொண்டால் பாரிய எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தற்போது நாடு பாரிய அரசியல் நெருக்கடியினை சர்வதேச அளவில் எதிர்கொண்டு வருகின்றது . அதற்கு தீர்வினை காண்பதை விடுத்து நாட்டு தலைவர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது முரணானது எனவும் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் (22-11-2018) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
6/grid1/Political
To Top