Top News

மைத்திரியை மாலை கரு சந்திக்கின்றார் !

பிந்திய செய்தி: இப்போது,கரு ஜெயசூரியா ஜனாதிபதி செயலகம் சென்றடைந்தார். 


அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுதலின் பேரில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

இன்றைய பாராளமன்ற அமர்வில் ஆளுந்தரப்பினர் கலந்து கொள்ளாத நிலையில் விஜேதாஸ ராஜபக்ஷ மட்டும் கலந்து கொண்டு வெற்று கதிரைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு,

"அரசியல் நெருக்கடியால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆகவே பாராளுமன்ற வேலைகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு ஜனாதிபதியுடன் பேசி ஓரிரு நாட்களில் இன்று நாடு எதிர் நோக்கியுள்ள பிரச்சினைக்கு ஒரு முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

மேலும் கலந்துரையாடி பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்வதில் ஜனாதிபதி விருப்புடன் இருக்கிறார் என்பதை நான் அறிவேன் எனவும் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர்,

“விஜேதாஸ அவர்களே உங்களின் ஆலோசனையை நான் ஏற்கிறேன். ஜனாதிபதியுடன் நான் பேச தயாராகவே உள்ளேன். எனக்கு அவருடன் தனிப்பட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இதை நான் பரிசீலிக்கின்றேன்” என தெரிவித்தார்.

இதற்கமையவே இந்த அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் தகவலை சபாநாயகர் காரியாலயம் உறுதி செய்துள்ளது.
Previous Post Next Post