என்னை கொலை செய்ய திட்டம் - அரசங்கம் நடவடிக்கை இல்லை : வடிவேல் சுரேஷ்

NEWS
என் மீது கொலைத்தாக்குதல் முயற்சி செய்யப்படுவதாகவும்,  பெற்றோல் குண்டு தாக்குதல் முயற்சி செய்யப்படுவதாகவும்,  பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தற்போது நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் இதனை குறிப்பிட்டார். 
அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில் ;

என் மீது கொலை முயற்சிகள் இடம்பெற்றாலும் எனக்கான உரிய பாதுகாப்புக்கள் வழங்கப்படவில்லை எனவும், எனது உயிருக்கு தொடர் அச்சுறுத்தல் காணப்படுவதாகும் தெரிவித்தார். இது தொடர்பில் நான் பசறை பொலிஸில் முறைப்பாடு செய்தும் எந்த பயனுமில்லை, அது போல எனக்காக அரசங்கம் சரியான பாதுகாப்புக்கு உதவில்லை எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் சபாநாயகர் பதில் வழங்கும் போது, குறித்த கொலை சம்பவத்தினை விசாரிக்க நான் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 


அன்மையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து, மகிந்த அணிக்கு தாவிய பின்பு மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவியதும் குறிப்பிடத்தக்கது.

சிலோன்_முஸ்லிம் பாராளுமன்ற செய்தியாளர்
6/grid1/Political
To Top