Top News

பெரும்பான்மை இருப்பதாக இருந்தால் தோற்கடித்துக்காட்டுங்கள் : மகிந்தவுக்கு ரணில் சவால்!


பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டதன் பின்னர் பெரும்பான்மைப் பலம் இருப்பதாக இருந்தால், அதனை தோற்கடித்துக்காட்ட வேண்டும் எனவும், அதனைவிடுத்து பாராளுமன்ற நடவடிக்கையைக் குழப்ப முயற்சிப்பது தனக்கு பெரும்பான்மை இல்லையென்பதையே காட்டுகின்றது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனால், பிரதமருக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. முடியுமானால் பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு செய்து காட்டட்டும் என முன்னாள் பிரதமர் சவால் விடுத்துள்ளார்.
Previous Post Next Post