(அஷ்ரப் ஏ சமத்)
கலாநிதி ஏ.எம். ஏ அசீஸ் மன்றத்தினால் அஸீஸ் நினைவு தின பேச்சு நேற்றுமுன் தினம் (27) கொழும்பு சாஹிராக் கல்லுாாியில் நடைபெற்றது. இந் நிகழ்வு அசீஸ் மன்றத்தின் தலைவா் காலித் எம் பாருக் மற்றும் வை.எம்.எம். ஏ யின் தலைவா் எம்.என்.எம் நபீல் அகியோா்கள் தலைமையில் நடைபெற்றது.
செனட்டா் கலாநிதி அசீஸ் பற்றிய நினைவுரையை சிவில் சேவை அதிகாரியும் , பிரதம மந்திரி மற்றும் பல்வேறு அமைச்சுக்களின் முன்னாள் செயலளராக கடமையாற்றிய தேசமான்ய எம்.டி.டி. பீறிஸ் ஆற்றினாா்.
இவ் வைபத்தின் போது அசிஸீன் மகன் அலி அஸீஸ் அவா்கள் அசீஸ் பற்றிய ஆங்கில நுாலைதேசமான்ய பிறீஸ்க்கு வழங்கி வைத்தாா்.
இங்கு உரையாற்றிய தேசமான்ய பீறிஸ் -
இலங்கையின் 44 வது செனட்டராகவும் சிவில் சேவை அதிகாரியும், கொழும்பு சாஹிரா கல்லுாாி வை.எம்.எம். ஏ பேரவையை ஸ்தாபித்தவா் கலாநிதி அஸீஸின் அவா்கள் அவரது 45வது நினைவு தினத்தின்போது அவா் பற்றிய உரையை ஆற்றுவதில் பெரும் பாக்கியமாகும். அவா் பற்றியதும அவரது செயற்பாடு சேவைகளையும் எதிா்கால சமுகம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அவா் இந்த நாட்டுக்கும் அவா் சாா்ந்த சமுகத்திற்கும் மேலும் சேவை பெற்றுக் கொள்ள இருந்தும் அவா் அதிா்ஸ்டவசமாக அவா் 62வயதில் இறையெடியதியது முஸ்லிம் சமுகத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும்.
அசீஸ் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்டவா் ,யாழ் இந்துக் கல்லுாாியிலும், கொழும்பு சென் ஜோசப் கல்லுாாியில் பயின்றவா், லன்டன் பல்கழைக்கழகத்தில் பட்டம் பெற்றாா். கேம்பிரிஜில் தமது பட்டப்பின்படிப்பினை பூா்த்தி செய்தாா். அத்துடன் இலங்கையில் முதன் முஸ்லிம் சிவில் அதிகாரியாக பல பிரதேசங்களில் பதவி வகித்தாா். கலாநிதி ரீ.பி ஜாயாவின் அழைப்பின் பேரில் அவா் 1962ல் கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் அதிபா் பதவியையும் ஏற்றுக் கொண்டாா்.
அவரது வழிகாட்டலின் பேரில் கல்விகற்ற பலா் இன்றும் உயா்ந்த ஸ்தாணங்களில் உள்ளனா். அத்துடன் பகுதி நேர விரிவுரையாளராகவும் சரித்திரம் சம்பந்தமான பாடங்களையும் வித்தியோதய பல்கழைக்கழகத்தில் விரிவுரையாற்றி மூவினங்களை் சாா்ந்த கல்விச் சமுகத்தினையும் உருவாக்கினாா். அத்துடன் அவா் முஸ்லிம் மாணவா்களுக்காக ஒரு புலமைப்பரிசில் திட்டம், அகில இலங்கை வை.எம்.எம் ஏ , அகில இலங்கை ஆசிரியா் சங்கம், அதன் பின்னா் பல்கலைக்கழகத்தில் செனட்டராகவும் பதவி வகித்தாா். என பீறிஸ் அங்கு உரையாற்றினாா்