இன ஒருமைப்பாடு ,நல்லிணக்க மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி இன்று(05.11.2018) கொழும்பு -10 மருதானையில் உள்ள முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களத்தின் கட்டிடத்தில் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாா்.
இந் நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள், முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளா், ஊழியா்களும் ஆதரவாலா்களும் கலந்து கொண்டனா். அத்துடன்இந் நிகழ்வின் போது சர்வமத வழிபாடுகளும் இடம் பெற்றன.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சா் பௌசி -
எனது 58வருட கால அரசியல் வாழ்வில் பல்வேறு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களையும் பாரம் எடுத்து இன.மத நிற பிரதேச பாகுபாடுகள் இன்றி என்னால் முடிந்த உச்ச சேவையாற்றியுள்ளேன். இன்றும் இந்த நாட்டில் வாழும் மூவின இனங்களும் தன்னை விரும்புகின்றனா்.
தனது சேவைகளை நினைவு கூறுகின்றனா். தற்பொழுது எனக்கு தரப்பட்டுள்ள அமைச்சினால் என்னால் முடிந்தளவு 24 மணித்தியாலயங்களும் நான் மக்களுக்காக சேவை செய்வேன். ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தேசிய ஒன்றுமைகளை ஏற்படுத்துவதற்காக இன நல்லிணக்க இராஜாங்க அமைச்சு தரப்பட்டது.
தற்பொழுது இதற்கு மேலதிகமாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சும் தரப்பட்டுள்ளது. அதற்காக தன்னால் இயன்ற சேவையை இந்த மக்களுக்கு செய்வேன். என்றும் முதல் அல்லாஹ்வுக்கும், ஜனாதிபதி . பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சவுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் என இராஜாங்க அமைச்சா் அங்கு தெரிவித்தாா்.
- அஷ்ரப் ஏ சமத்
- அஷ்ரப் ஏ சமத்