பாராளுமன்ற பார்வையாளர் பகுதிக்கு மீண்டும் பூட்டு!

Ceylon Muslim
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்றத்தின் பொதுமக்களுக்கான பார்வையாளர் பகுதி மற்றும் சபாநாயகரின் விசேட விருந்தினர் பார்வையாளர் பகுதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அன்றைய தினம் ஊடகவியலாளருக்கு மாத்திரம் பார்வையாளர் பகுதியில் அனுமதி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

படைக்கல சேவிதரின் அலுவலகம் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் போது பார்வையாளர் பகுதியில் இருந்து கூச்சல் மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (19) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதும் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top