Top News

அதாவுல்லாஹ்வின் மகனே! அக்கரைப்பற்று கம்பரலிய திட்டத்தை தடுத்தார் - தவம்

அதாவுல்லாவின் மகனால் இந்த வருடம் மட்டும் 150 மில்லியன் (15 கோடி) அக்கரைப்பற்று அபிவிருத்தி தடுக்கப்பட்டுள்ளது. என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; 

கம்பெரலிய திட்டத்தின் கீழ் நாம் கொண்டு வந்த வேலைகளை செய்ய விடாமல் அதாவுல்லாவின் மகன் தடுத்துள்ளார். அவர் அதாவுல்லாவின் மகனே தவிர அக்கரைப்பற்று மேயர் அல்ல.

அக்கரைப்பற்றினை அதாவுல்லாவும் அவருடைய மகனும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டுடிருக்கும் slow poison ஆக மாறி இருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் கம்பெரலிய வேலைத்திட்டம் நடக்கின்ற போதும், அக்கரைப்பற்றில் மற்றவர்கள் வேலை செய்தால் தனதும் தனது தந்தையினதும் எதிர்காலம் அழிந்து போகும் என்பதால் தடுத்துள்ளார்கள்.

அவர்களால் 5 சதம் கூட கொண்டுவர முடியாது. கொண்டு வருபவர்களையும் செய்ய விடுவதில்லை. அந்த வகையில் வைக்கோல் பட்டறையில் கட்டிய நாலுகால் விலங்காக அவர்கள் செயற்படுகிறார்கள்.

இது மட்டுமல்ல எமது நகர திட்டமிடல் அமைச்சின் கீழ் கிடைத்த 75 மில்லியன் பெறுமதியான வீதி அபிவிருத்தி மற்றும் சந்தை நிர்மானத்திற்கான 50 மில்லியன், கடற்கரை குடும்பப் பூங்காவிற்கான 08 மில்லியன் என்பவற்றிற்கான மதிப்பீட்டறிக்கையை தாமதப்படுத்தியும் வீணான தர்க்கம் புரிந்தும் தடுத்துள்ளனர். அதேபோன்று சமூக நல்லிணக்க அமைச்சினூடாக வந்த 8 மில்லியன் என இந்த வருடம் மட்டுமே எம்மால் கொண்டுவரப்பட்ட சுமார் 150 (15 கோடி) மில்லியன் பெறுமதியான அக்கரைப்பற்று அபிவிருத்தியை அதாவுல்லாவும் மகனும் தடுத்துள்ளனர்.

இவ்வாறு தனது முகநூலில் மாகாண சபை உறுப்பினர் தவம் தெரிவித்தார். 
Previous Post Next Post