Top News

நாமல் குமாராவின் அடுத்த இரகசியம்: பொலிசார் விடுத்த எச்சரிக்கை

பொலிஸுக்குத் தகவல் வழங்குநராக செயற்படுவதாகக் கூறப்படும் நாமல் குமார என்பவருக்கு பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையைப் பெற்றுக்ெகாடுத்த மறுகணமே அதனை மீளப்பெற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, எதிர்காலத்தில் எல்லாச் செயற்பாடுகளையும் நிறுத்தும்படி உத்தரவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை நடத்தவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இது தொடர்பான விசாரணைகள் நடைபெறுமென கூறப்படுகின்றது. நாமல் குமாரவால் குற்ற விசாரணைத் திணைக்களத்திற்கு கொலை முயற்சி தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டை, குறிப்பிட்டுள்ளபடி முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவுடன் நாமல் குமார அந்த ஐந்து இலட்சம் ரூபா பணப்பரிசைப் பெற, பொலிஸ் தலைமையகத்துக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்றுள்ளார்

அச்சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்தில் மேலும் பல அதிகாரிகள் புகைப்படம் எடுப்பதற்கு வந்திருந்தோர் முன்னிலையில், பொலிஸ் மாஅதிபரால் குறிப்பிட்ட காசோலை நாமல் குமாரவுக்கு வழங்கப்பட்டு மீண்டும் பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் அனைத்துச் செயற்பாடுகளையும் உடனடியாக நிறுத்தும்படி கூறியுள்ளார்.

நாமல் குமார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அது பற்றிக் கூறும்போது தான் கொலை சூழ்ச்சித் திட்டத்தை வெளியிடத்

தயாராகவுள்ளதாகப் பொலிஸ் மாஅதிபர் தகவல்களை அறிந்துகொண்டு இனிமேல் எதுவும் செய்ய வேண்டாமெனப் எச்சரித்ததாகக் கூறினார். பொலிஸ் மாஅதிபரின் இந்த மிரட்டல், நாமல் குமாரவைப் பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது மாத்திரமல்ல அந்தக் காசோலை நாமல் குமாரவின் பெயருக்கல்ல, நாலக டி சில்வாவின் பெயருக்கே எழுதியிருந்ததாகக் கூறப்பட்டது. நாமல்குமார குற்ற புலனாய்வுத் திணைக்களத்துக்கு கூறியுள்ள விடயங்களுடன் இந்தக் கொலை சூழ்ச்சியில் அரசியல்வாதிகள் இருவருக்கும் அரசாங்க அதிகாரிகள் இருவருக்கும் தொடர்புள்ளதெனக் கூறப்பட்டுள்ளது.

அதைத்தவிர, சூழ்ச்சியில் தொடர்பு இல்லையென்றாலும் இந்த சூழ்ச்சி தொடர்பாக இன்னோர் அரசியல்வாதியும் அறிந்திருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. அந்த சூழ்ச்சியை செயல்படுத்தும் விதம் குறித்த திட்டமும் ஆலோசனைகளும் அடங்கிய கடிதம் தனக்குக் கிடைக்காவிட்டாலும் அது தொடர்பான தகவல் தனது தொலைபேசியில் அழிந்து போன பகுதியில் உள்ளதாகக் கூறியதனால் தற்போது அந்தத் தொலைபேசி ஆய்வுக்காக வெளிநாடொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, நாமல்குமாரவால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இதுவரை வெளியிடாத நபரொருவர் பற்றிய தகவல்களையும் எதிர்வரும் 5ஆந் திகதி அம்பாறை மகாஓயா நகரில் தெரிவிப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றார். சம்பந்தப்பட்ட அரச அதிகாரியான அந்த நபர், இன்னும் அந்தப் பதவியில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அன்று காலை 10 மணிக்கு மகாஓயாவில் அந்தத் தகவல்களை வெளியிடவுள்ளதாகவும் அச்சந்தர்ப்பத்தில் தனக்குப் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கும்படியும் கேட்டுள்ளார்.
Previous Post Next Post