புகையிரத கட்டணங்களுக்கு அமைய புதிய பயணச்சீட்டுக்கள் !

Ceylon Muslim
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் புகையிரத தொகுதியின் முதலாவது தொகுதி அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். 

அவற்றில் இரண்டு புகையிரத எஞ்சின்களும், புகையிரத பெட்டிகளும் உள்ளடங்குகின்றன. இவ்வாறு கொண்டு வரப்படும் புகையிரத தொகுதியின் முதலாவது பரீட்சார்த்த பயணம் கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. அதன் தரத்தின் அடிப்படையில், எஞ்சிய புகையிரத தொகுதிகளும் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புகையிரத கட்டணங்கள் அதிகரித்த நிலையில், புகையிரத திணைக்களத்தின் வருமானமும் அதிகரித்திருப்பதாக புகையிரத பொதுமுகாமையாளர் குறிப்பிட்டார். புகையிரத கட்டணங்களுக்கு அமைய புதிய பயணச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


(அரசாங்க தகவல் திணைக்களம்)
6/grid1/Political
To Top