Top News

நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா வேண்டுகோள்!


இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையிலும் சட்டத்தின் ஆட்சி அடிப்படையிலும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வன் ஹொலன், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரை பதவியிலிருந்து நீக்கியது தொடர்பிலும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களை நிராகரித்தமை தொடர்பிலும் தான் அவதானமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தம் குறித்து வாக்குறுதி வழங்கிய பின்னர் 2015 தேர்தலில் இருந்து அமெரிக்கா மற்றும் இலங்கை உறவுகள் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கடந்த சில வாரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் இலங்கை சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலமை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்கு தடையாக அமையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த நிலமையை முடிக்கு எடுத்து வந்து அரசியலமைப்பு, ஜனநாயக வழிமுறைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் ஜனாதிபதியிடம் வேண்டியுள்ளார்.

Previous Post Next Post