ஜனாதிபதி பழைய அமைச்சரவையை இனியாவது உருவாக்குவாரா? ரிசாத்

NEWS
சிலோன் முஸ்லிம் பாராளுமன்ற செய்தியாளர்

இனியாவது, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி எப்படியான அமைச்சரவை இருந்ததோ அதுபோல் மீண்டும் பழைய நிலைக்கு ஜனாதிபதி மாற்றியமைப்பார் என நம்புவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். 

பாராளுமன்ற அமர்வு இன்று (29) நடைபெற்ற போது, பிரதமர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி கையாள்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை 123 வாக்குகளால் வெற்றிகண்டது இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி பதவி ஏற்கும்போது எடுத்த வாக்குறுதிக்கு அமையவும்,அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி செயற்படுவார் எனவும் நம்புவதாக மேலும் தெரிவித்தார்.


6/grid1/Political
To Top