ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேதசந்திர பெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச தரப்பு இன்னமும் உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேதசந்திர தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சி தாவ வைப்பதற்காக தனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து தனது தாயிடம் பேரம் பேசப்பட்டுள்ளதாக ஹிருணிக்கா கூறியுள்ளார்.
அதற்கமைய கட்சி மாறுவதற்காக தனக்கு 65 கோடி ரூபாய் வழங்குவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாக தாயாரிடம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்ற தொலைபேசி அழைப்பு ஒன்று ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் அண்மையில் கிடைத்துள்ளதென ஹிருணிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.