பேருவளை முஸ்லிம் மாணவன் தாக்கியதில் பலி ; இன்றும் பாடசாலைக்கு பூட்டு

NEWS
களுத்தறைக் கல்வி வலய பேருவளை சீனன்கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை கால வரையறையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் தர வகுப்பு மாணவனின் மரணத்தையடுத்து கல்வி வலயம் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் எமது டெய்லி சிலோனுக்கு அறிவித்தார்.

நேற்று முதல் இந்தப் பாடசாலை மூடப்பட்டிருப்பதாகவும் நாளைய தினம் பாடசாலை மீண்டும் திறக்கப்படலாம் எனவும் அவ்வாசிரியர் மேலும் குறிப்பிட்டார்.

பதற்ற நிலைமைகளைத் தவிர்ப்பதற்கும், ஆசிரியர்களினதும், மாணவர்களினதும் மன உளைச்சலை சீர் செய்யும் வகையிலும் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
6/grid1/Political
To Top