பலத்த பாதுகாப்புடன் நாளை பாராளுமன்றம் கூடுகின்றது!

Ceylon Muslim

பலத்த பாதுகாப்பின் மத்தியில் பாராளுமன்றம் மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக நாளைய அமர்வு நேரத்தின்போது பாராளுமன்ற வளாகம் மற்றும் கட்டடத்தொகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் கடந்த 14,15 மற்றும் 16ஆம் திகதிகளில் ஆளும் எதிர்த்தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 பாராளுமன்ற உறுப்பினர்களும் உரிய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே சபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பார்வையாளர் என எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
6/grid1/Political
To Top