இலங்கையிலுள்ள அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு மறு அறிவித்தல் வரும்வரை புதிய நியமனங்களை வழங்க வேண்டாமென ஜனாதிபதியின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஆனாலும் அவசர தேவை இருக்குமாயின் மேலதிக செயலர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் அல்லது ஓய்வு பெற்ற தகைமை உள்ள அரச அதிகாரி ஒருவர் அல்லது சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அரசியல் பின்புலம் எதுவும் இல்லாத வகையில் நியமிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி செயலர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவித்தலானது அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதமர், அமைச்சரவை, பொதுநிர்வாக அமைச்சு, நிதி அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது இதேவேளை புதிய அமைச்சரவையின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பதற்கான முயற்சி மேற்கொள்லப்பட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டால் அது தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.