தான் வெட்டிய குழிக்குள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தன்னைத் தானே வீழ்த்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார் குமார வெல்கம.
நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத ஒருவரிடம் ஆட்சியை ஒப்படப்பதற்கு முன்பாக அரச இயந்திரம் முடங்குவதுடன் தனது எதிர்காலமும் பாதிக்கப்படப் போகிறது என்பதை மைத்ரி உணராது, ரணில் - மஹிந்த மோதலை உருவாக்கிக் குளிர் காய நினைத்ததாகவும் இப்போது அதில் தானே வீழ்ந்து வெளிவர முடியாமல் தவிப்பதாகவும் வெல்கம விளக்கமளித்துள்ளார்.
தற்சமயம் அரச இயக்கம் பெரும்பாலும் கட்டுப்பாடிழந்துள்ள நிலையில் தேர்தல் ஒன்றே தீர்வாயினும் அதற்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படும் எனவும் நாடாளுமன்றில் இணக்கம் ஏறபடாவிட்டால் 2020 வரை குழப்ப சூழ்நிலை நீடிக்கும் எனவும் வெல்கம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.