Top News

மைத்திரிக்கு “ஆப்பு” வைத்த மகிந்த!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு நெருக்கமான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 40க்கும் அதிகமானோரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஊடாக நாடாளுமன்றத்தினுள் தீர்மானமிக்க சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொள்வதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கைவிட்டு, தாமரை மொட்டில் இணைந்தமையினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இவ்வாறான நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கைவிடுவார் என ஜனாதிபதி நம்பவில்லை. இது தொடர்பில் பசில் ராஜபக்சவிடம் ஜனாதிபதி குற்றம் கூறியிருந்தார்.

இதனால் எங்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தாமரை மொட்டில் போட்டியிடப்போவதில்லை என துமிந்த திஸாநாயக்க, பசிலின் முகத்திற்கு நேராக கூறிவிட்டார். சரத் அமுனுகமவும் அதே நிலைப்பாட்டில் உள்ளார். பின்னர் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டோம். ஜனாதிபதி அச்சமடைய வேண்டாம் என கூறினார். தாமரை மொட்டு அல்லது பொது சின்னத்தில் போட்டியிடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனைத்து மாவட்டங்களிலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இருவர் பொது சின்னத்தில் போட்டியிடுவதாக ஜனாதிபதி கூறினார். தேசிய பட்டியலில் 7 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். எங்களை பயமின்றி தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார். அனைத்தையும் தான் பார்த்து கொள்வதாக ஜனாதிபதி கூறினார் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post